புதிய கட்சி தொடங்கும் குமார வெல்கம
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
பயணத்தடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிகரான கட்சியொன்று உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் சிறுவர் இல்லமொன்றுக்கு உணவு வழங்கியதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் இந்த புதிய கட்சி அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.