அரசாங்கத்திற்குள் இருந்து கத்திக்கொண்டிருக்காமல் வெளியேறி வாருங்கள்: குமார வெல்கம அழைப்பு
அரசாங்கத்தில் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் கூறுவது போல், யுகதனவி உடன்படிக்கை தொடர்பிலான பிரச்சினை குறித்து தாம் கூறுவதை அரசாங்கத்தின் தலைவர்கள் செவிமடுப்பதில்லை என்றால், அரசாங்கத்திற்குள் இருந்து கோஷமிடாது வெளியேற வேண்டியதையே சிறிய கட்சிகளின் தலைவர்கள் செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம(Kumara welgama) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதில் இருப்போருக்கு தெளிவுபடுத்துவதில்லை என்றால், அவர்கள் கூறுவதை கேட்பதில்லை என்றால், அதற்குள் இருக்காமல் வெளியில் வாருங்கள். உள்ளே இருந்து கத்திக்கொண்டிருக்காமல் வெளியே வாருங்கள்.
அமைச்சு பதவிகள் மிகப் பெரிய விடயங்களா? அமைச்சு பதவிகள் என்றும் நிலைத்திருக்குமா? இல்லை. மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுக்க அமைச்சு பதவிகள் தேவையில்லை.
மக்களுக்காக வேலைகளை செய்ய அமைச்சு பதவிகளோ, அரச அதிகாரமோ தேவையில்லை. வெளியில் வந்தால், நாம் அனைவரும் இணைந்து, குரல் எழுப்பி நாட்டை சிறந்த இடத்திற்கு கொண்டு வர முடியும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri