குமார வெல்கம திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய குமார வெல்கம எம்.பி திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சிங்கப்பூருக்கான தனிப்பட்ட விஜயமொன்றை முடித்துக்கொண்டு இன்று முற்பகல் நாடு திரும்பியிருந்தார்.
விமான நிலையத்தில் அவசர முதலுதவி
இந்நிலையில் விமான நிலையத்தில் வைத்து அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு விமான நிலையத்தின் அவசர முதலுதவிச் சிகிச்சை மையத்தில் ஆரம்ப கட்ட சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் விமான நிலையத்தின் அம்புலன்ஸ் ஒன்றின் மூலம் உடனடியாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan
