குளியாப்பிட்டிய இளைஞனின் கொலைக்கான காரணம் வெளியானது
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுசித் ஜெயவம்ச என்ற இளைஞன், 17 வயது யுவதியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி திருமணம் செய்துக்கொள்ள மறுத்தமையே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட இளைஞன் சிங்கிதியின் (பிரதான சந்தேகநபரின் ) மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், வேறு ஒரு யுவதியுடனும் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த யுவதியும் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் வெளியான தகவல்
சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த இளைஞரை வீட்டில் வைத்து கொலை செய்து பின்னர் சடலத்தை வாகனத்தின் பின் இருக்கையில் அமர வைத்து மாதம்பே பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தனது மகளை காதலித்து ஏமாற்றிய காரணத்தினால் இந்த கொலை இடம்பெற்றதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் முன்பு திருமணமாகி பின்னர் சட்டப்பூர்வமாக மனைவியிடமிருந்து பிரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam