காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர் மாயம்: விசாரணையில் சிக்கிய அரசியல்வாதி
குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச்சென்று காணாமல்போன இளைஞரை கைவிலங்கிட்டு காரில் முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குளியாபிட்டிய, கபாலவெ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான சுசித் ஜயவன்ச என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காணாமல்போனதாக கூறப்படும் இளைஞரின் காதலியின் தந்தை குளியாபிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் சிறு ஊழியர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
திட்டமிடப்பட்ட சம்பவம்
காணாமல்போனதாக கூறப்படும் இளைஞர் கைகள் கட்டப்பட்டு அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு கடந்த 22ஆம் திகதி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலியின் தந்தை முன்கூட்டியே திட்டமிட்டு இந்த குற்றத்தினை செய்துள்ளதாக தெரியவருகின்றது. இதற்காக அவர் கெப்பட்டிபொல பிரதேசத்தில் இருந்து நண்பர்கள் இருவரை அழைத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரும் நேற்று முன்தினம் (29) விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை காரில் அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளதாகவும், இதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கைது செய்யப்பட்ட இருவரும் கூறியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்
இவர்கள் கூறுவது உண்மையா என்பதினை அறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,இவர்களை குளியாப்பிட்டி பகுதிக்கு அழைத்து வந்து பின்னர், சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் வீட்டிற்குச் சென்று சோதனையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அரசியல்வாதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
காணாமல்போன இளைஞரின் காதலியின் தந்தை அரசியல்வாதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதலியின் குடும்பத்தினர் தலைமறைவு
இளைஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள காரணத்தினால் காதலியின் தந்தை குடும்ப உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு தலைமறைவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களுடன் காதலியின் மாமனார் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவினர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
