குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் மரணம்
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சாமிமலை ஹொரன பெருந்தோட்ட மார்க்கத்துக்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கனகரட்னம் (வயது 36) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று மதியம் தான் வளர்க்கும் பசுவுக்குப் புல் வெட்டிக் கொண்டு குடிதண்ணீர் குழாய் செப்பனிடச் சென்ற வேளையில் அதி விஷமுள்ள குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் மரணித்துள்ளார்.
இவரது ச டலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri