ஐரோப்பிய தேர்தல் ஒன்றிய குழுவினரை சந்தித்த குகதாசன் எம்.பி
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கல் பீட்டர்ஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (09) திருகோணமலையில் (Trincomalee) உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட பணிமனையில் நடைபெற்றுள்ளது.
களநிலவரங்கள்
இதன்போது, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், நீதியான தேர்தல், தேர்தல் வன்முறை சம்பவங்கள், தற்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று இடம் பெறவேண்டும் என்பது தொடர்பாக, கண்காணிப்பு குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
