20 கோடி ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
பண்டாரகம - மஸ்வில பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த ரகசிய போதைப்பொருள் களஞ்சியசாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகச் சோதனையிட்டு, சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமன் சில்வாவின் மேற்பார்வையில், தலைமையக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 22 வயதுடைய நபர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு சலிது'வின் போதைப்பொருள் வலைப்பின்னலின் முக்கிய உறுப்பினராவார்.

இவர் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியாவில் வசித்துவிட்டு அண்மையிலேயே இலங்கை திரும்பியுள்ளார். 'குடு சலிந்து'வின் பிரதான கூட்டாளியான 'ரவிஷ்க' என்பவருடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தே இவர் இந்த களஞ்சியசாலையை நிர்வகித்து வந்துள்ளார்.
டுபாயில் இருக்கும் ரவிஷ்க கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நபர்களுக்கு இவர் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகுதி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan