பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடு அஞ்சுவை நாட்டிற்கு அனுப்புவது கடினம் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அரசியல் அகதிகளுக்கான ஓப்ரா என்ற அமைப்பில் அவர் பதிவு செய்யப்பட்டுள்ளமையே அதற்கு காரணமாகும். அஞ்சு ஒரு பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் பரிஸில் உள்ள இன்டர்போல் பொலிஸார் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அஞ்சு

அஞ்சுவின் சார்பில் உயர்மட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையாகி வருவதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரை இலங்கைக்கு அனுப்பினால் கொன்று விடுவார்கள் என கூறி அந்த சட்டத்தரணிகள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பிரான்ஸ் பொலிஸார் நேற்று அஞ்சுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri