அதிரடியாக மூடப்பட்ட குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளரின் உத்தியோகபூர்வ அலுவலக அறை
குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (16.12.2025) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய அலுவலக அறை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத் தலைவர் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறைக்கு சீல்
இந்நிலையில் அவர் இன்று (17.12.2025) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார்.

இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார்.
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri