கனடா மாரியப்பன் மற்றும் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய திருமலை முபாரக்!
திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷா ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அய்னியப்பிள்ளை முபாரக் மீது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் கடுமையான அதிருப்திகளை வெளியிட்டு கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இவர் ஊழலோடு தொடர்புடையவர், இவர் எங்களுக்கு கையூட்டல் தர முற்பட்டார் என கூறியே அய்னியப்பிள்ளை முபாரக் தவிசாளராக முன்மொழியப்பட்ட கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து மிகக்காட்டமான தொனியில் தமிழரசுக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரான சுமந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வெளியாகின்றது.
ஆனாலும், தங்களுக்கு பதவி போனாலும் பரவாயில்லை என்று குறித்த 3 வேட்பாளர்களும் அய்னியப்பிள்ளை முபாரக்கிற்கு வாக்களிக்கவில்லை.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam