ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் புடின்: ஆனாலும் எழுந்துள்ள சிக்கல்
ரஷ்ய(Russia) உக்ரைன் போர் வலுவடைந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி தயார் என கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளும் ரஷ்ய அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்கள்.
ரஷ்ய ஜனாதிபதி தயார்
எனினும் அந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் வந்த வண்ணம் வந்துள்ளது.
இந்நிலையில், தேவைப்பட்டால் ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி தயார் என கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
எனினும், 2024ஆம் ஆண்டு, மே மாதம் 20ஆம் திகதியுடன் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின்(Volodymyr Zelenskyy) பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
போர் ஆரம்பித்ததிலிருந்து உக்ரைனில் இராணுவச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
ரஷ்ய தரப்பு
இராணுவச் சட்டம் நடைமுறையில் உள்ள போது உக்ரைனில் தேர்தல் நடக்கமுடியாது. ஆகவே, அந்த சட்டப்படி ஜெலன்ஸ்கி இப்போது உக்ரைனின் ஜனாதிபதியே இல்லை என ஒரு கருத்து ரஷ்ய தரப்பில் கூறப்படுகின்றது.
உக்ரைன் அரசியல் சாசனத்தின்படி அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும்வரை ஜெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதியாக நீடிக்க சட்டம் அனுமதிக்கிறது.
என்றாலும், உக்ரைன் போர் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது என்னும் விடயம் வரும்போது, முறைப்படி உக்ரைனின் தலைவர் யாரோ அவரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்னும் பிரச்சினை உருவாகும் என்றும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |