நீதிமன்றத்துக்குள் களமிறக்கப்படும் ஆயுதமேந்திய தரப்பினர்! வலுக்கும் புதுக்கடை நீதிமன்ற விவகாரம்
நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்கும் சட்டத்தரணிகளையும் பரிசோதனை செய்வது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்துக்குள் ஆயுதமேந்திய தரப்பினரை பாதுகாப்புக்கு அமர்த்துவது குறித்து ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன முன்வைத்த வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஹர்ஷன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பரிசோதனை நடவடிக்கை
இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று (20) இடம்பெற்ற சிறப்பு கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வளாகத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களையும் சட்டத்தரணிகளையும் பரிசோதிக்கும் நடவடிக்கை இதன்மூலம் மெற்கொள்ளப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |