KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு

Football United Kingdom Sports
By Sajithra Oct 02, 2026 04:31 PM GMT
Report

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Kent Premier League (KPL) 2026 கரப்பந்தாட்டப் போட்டித் தொடரின் நான்காவது ஆண்டுக்கான மாபெரும் போட்டி, கடந்த 27 செப்டெம்பர் 2026, பிரித்தானியாவிலுள்ள Kent மாநிலத்தின் Maidstone Leisure Centre உள்ளக விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்ற இப்போட்டி, Open 5-A-Side மற்றும் Over-50 என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றதுடன், நாள் முழுவதும் பல்வேறு கட்டங்களாக இடம்பெற்ற போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் KPL போட்டித் தொடரின் நான்காவது ஆண்டான இம்முறை, உள்ளக விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Open 5-A-Side பிரிவில் Maidstone Super Kings சம்பியன்

விறுவிறுப்பாக நடைபெற்ற Open 5-A-Side பிரிவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் தங்களது அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதிக்கட்டப் போட்டிகளைத் தொடர்ந்து முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள்:

1ம் இடம் – Maidstone Super Kings

2ம் இடம் – Wales Warriors 

3ம் இடம் – AGNI 

4ம் இடம் – Ratha Special Force 

இதன் மூலம் Maidstone Super Kings அணி KPL 2026 Open 5-A-Side பிரிவின் சம்பியனாகத் திகழ்ந்தது.

Open பிரிவின் போட்டி நாயகன் விருது Maidstone Super Kings அணியைச் சேர்ந்த குட்டிக்கு வழங்கப்பட்டது.

அதேவேளை, தொடரின் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய Wales Warriors அணியைச் சேர்ந்த பன்னீர், போட்டி தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

Over-50 பிரிவில் Sujatha அணி வெற்றி

50 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கான Over-50 பிரிவிலும் பலத்த போட்டி நிலவியது. இப்பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள்:

 1ம் இடம் – Sujatha 

2ம் இடம் – Rising Stars

3ம் இடம் – King Cobra 

4ம் இடம் – Eagles

இதன் மூலம் Sujatha அணி KPL 2026 Over-50 பிரிவின் சம்பியனாகியது. Over-50 பிரிவின் போட்டி நாயகன் விருது Sujatha அணியைச் சேர்ந்த சுபாஸுக்கு வழங்கப்பட்டது.

மேலும், போட்டித் தொடரின் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய Sujatha அணியைச் சேர்ந்த குகன், போட்டி தொடர்நாயகன் விருதைப் பெற்றார்.

ஏல முறையில் உருவான KPL அணிகள்

KPL போட்டித் தொடரின் முக்கிய தனித்துவங்களில் ஒன்றாக வீரர்கள் ஏல முறையில் அணிகளுக்குத் தெரிவு செய்யப்படுவது அமைந்துள்ளது.

வழமையாக வெவ்வேறு கழகங்களுக்காக விளையாடும் வீரர்கள், KPL போட்டியில் வெவ்வேறு அணிகளின் கீழ் ஒன்றிணைந்து களமிறங்கினர்.

இதன் மூலம் பல்வேறு கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியதுடன், புதிய விளையாட்டு அனுபவம், வீரர்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் கழகங்களுக்கிடையிலான நட்புறவு ஆகியவற்றை வளர்ப்பதற்கும் KPL ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது. 

ரசிகர்களை கவர்ந்த KPL 2026  

போட்டி நாளன்று காலை முதலே Maidstone Leisure Centre கரப்பந்தாட்ட ரசிகர்களால் களைகட்டியிருந்தது.

ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியதுடன், Open மற்றும் Over-50 பிரிவுகளில் இடம்பெற்ற லீக் மற்றும் அடுத்தகட்டப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.

காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வரை சென்ற போட்டிகளில் வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் அணிச் சேர்க்கை வெளிப்பட்டதுடன், முக்கியமான தருணங்களில் ரசிகர்களின் ஆரவாரமும் மைதானத்தை அதிர வைத்தது. 

நேரலை ஒளிபரப்பும் இடம்பெற்றது

KPL 2026 போட்டியின் மற்றுமொரு முக்கிய அம்சமாக மெய்வெளித் தொலைக்காட்சி மற்றும் இணையவழி நேரலை ஒளிபரப்பு அமைந்திருந்தது.

Maidstone Leisure Centre-க்கு நேரடியாக வர முடியாத பிரித்தானியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கரப்பந்தாட்ட ரசிகர்களும் போட்டிகளை நேரடியாகக் காணும் வகையில் ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் KPL போட்டி மைதானத்தைத் தாண்டி உலகளாவிய பார்வையாளர்களையும் சென்றடைந்தது. போட்டி ஏற்பாட்டாளர்களின் நன்றி

KPL போட்டியை தொடர்ந்து நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் KPL குழுமத்திற்கும், போட்டியை சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனுசரணையாளர்கள், அணி உரிமையாளர்கள், முகாமையாளர்கள், வீரர்கள், நடுவர்கள், புள்ளியிடும் நடுவர்கள், கோட்டுக்காப்பாளர்கள், ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பல்வேறு வகைகளில் உதவிகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் KPL ஒருங்கிணைப்பாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். 

அனைவரது ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினாலேயே KPL 2026 போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்த முடிந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய 18 அணிகளின் வீரர்களுக்கும், போட்டியை நேரில் வந்து ரசித்து ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

KPL 2026 போட்டியானது கிரி – சுரேஸ் – கிருஷ்ணா – சுபாஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

KPL 2026 – வெற்றியாளர்கள்

Open 5-A-Side 

சம்பியன் – Maidstone Super Kings

2ம் இடம் – Wales Warriors 

3ம் இடம் – AGNI

4ம் இடம் – Ratha Special Force

போட்டி நாயகன் – குட்டி (Maidstone Super Kings) 

போட்டி தொடர்நாயகன் – பன்னீர் (Wales Warriors) 

Over-50 

சம்பியன் – Sujatha

🥈 2ம் இடம் – Rising Stars 

3ம் இடம் – King Cobra

4ம் இடம் – Eagles 

போட்டி நாயகன் – சுபாஸ் (Sujatha) 

போட்டி தொடர்நாயகன் – குகன்

(Sujatha)https://vm.tiktok.com/ZN8hMo5s1/

KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு | Kpl 2026 Maidstone Super Kings Crowned Champions

KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு | Kpl 2026 Maidstone Super Kings Crowned Champions

KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு | Kpl 2026 Maidstone Super Kings Crowned Champions

KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு | Kpl 2026 Maidstone Super Kings Crowned Champions

KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு | Kpl 2026 Maidstone Super Kings Crowned Champions

KPL 2026: Maidstone Super Kings சம்பியன் – 18 அணிகள் பங்கேற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி நிறைவு | Kpl 2026 Maidstone Super Kings Crowned Champions

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US