இந்த அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்தமைக்காக வெட்கப்படுகிறேன்! பிக்கு முன்வைத்துள்ள அவசர கோரிக்கை
ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டுமென பிரபல பௌத்த பிக்குவான கொட்டுவே பொடி ஹதுருவோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தாம் இந்தியாவிலிருந்து அவசரமாக முகநூலில் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆட்சியை விரும்பவில்லை என்றால் ஜனாதிபதியும், பிரதமரும் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தாம் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அங்குள்ள மக்கள் இலங்கையில் சாப்பிட இல்லைதானே? வறுமையா? பிரச்சினையா? என கேள்வி எழுப்புவதாகவும், நாடு குறித்து தாம் வெட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இந்த அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்தமைக்காக வெட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கன துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் மக்கள் போராட்டங்களை நடத்திய போதிலும், அப்போது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிர்களைக் கொலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்த யார் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கியது என்பதனை கண்டறிந்து அவருக்கு உடன் தண்டனை விதிக்க வேண்டுமென கொட்டுவே பொடி ஹமுதுருவோ கோரியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri