கோட்டாபய அரசின் புதிய நகர்வு! மோசமடையும் ரூபாய் - புலம்பெயர் தமிழர்களின் முடிவு இதுவே (Video)
இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதனை தமிழர்களுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றேன் என பிரித்தானியாவின் தொழில் கட்சியின் தமிழ் பிரிவின் தலைவர் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக அதிலிருந்து தப்பித்துக்கொள்ள புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம்” என இலங்கை அரசாங்கம் வதந்திகளை முன்வைக்கப் பார்க்கின்றது.
அவ்வாறான வலையில் நம்மவர்கள் விழுந்தது மிகவும் வருத்தத்திற்குரியதாகவும், கவனிக்க கூடியதாகவும் உள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது பாரிய சரிவை சந்தித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து இன்று வரை ரூபாவின் பெறுமதியானது அரவாசியாக வந்துள்ளது. எனவே அறிவுள்ள யாரும் இலங்கையில் தற்போது முதலீடு செய்யமாட்டார்கள்.
இவ்வாறான நேரத்தில் தமிழர்களை கூட்டி கொண்டு முதலீடு செய்ய வைப்பதற்கு நாங்கள் ஒரு பாலமாக இருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது ஏற்கத்தக்கதல்ல” என அவர் மேலும் கூறியுள்ளார்.





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
