10 ரூபாவால் அதிகரிக்கும் கொத்து ரொட்டியும் பாணும்
இலங்கையில் கொத்துரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
நாளை திங்கட்கிழமை முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன்படி கொத்து ரொட்டி 10 ரூபாவாலும், சிற்றுண்டிகளான முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி, ரோல்ஸ் போன்றவற்றின் விலை 5ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை பாணின் விலையும் இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கையி்ல் ஏற்கனவே பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.



இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
