விபத்தில் உயிரிழந்த கொத்தலாவலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இழப்பீடு
பதுளையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த கொத்தலாவலை பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பதுளையில் களப்பயணம் மேற்கொள்கையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க
குறித்த சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் ஊடாக ஏதேனும் இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர் ஒருவரின் தந்தையினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விபத்திற்குள்ளான மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலும், குறித்த சம்பவம் குறித்து பூரண மற்றும் நடுநிலையான விசாரணையை முன்னெடுக்குமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு மீண்டும் அழைக்கப்படும் போது இழப்பீடு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam