திடீர் மரணமடைந்த கொத்தலாவல பல்கலை மாணவி.. வெளியான காரணம்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வந்த மூன்றாம் ஆண்டு மாணவி உயிரழந்தமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவிக்கு முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தில் தாதியியல் மற்றும் குடும்ப நலப் பட்டப் படிப்பை பயின்று வந்த மூன்றாம் வருட மாணவி உயிரிழந்தார்.
இரத்தக் கசிவு
இந்தநிலையில், பெற்றோரின் தீர்மானத்துக்கமைய, அவரது உறுப்புகள் அகற்றப்பட்ட பின்னர், மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று (9) கண்டி தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரேதப் பரிசோதனையின் போது, முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின்படி, இது முதுகெலும்பு சுருக்கத்தின் சிக்கல்களால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் என்று தீர்மானித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டிற்கு வந்திருந்த இந்த மாணவி, 6ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டில் உள்ள குளியலறையில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்த மாணவியின் சிறுநீரகம் உட்பட வேறு ஒருவருக்குப் பொருத்தக்கூடிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri