கொட்டாஞ்சேனை மாணவி மரணம்! சபையில் கடுமையான வாக்குவாதம்..
கொட்டாஞ்சேனையில் 15 வயதான பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டமைக்கு காரணம் நாட்டில் சரியான நடைமுறை பின்பற்றப்படாமையே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பில் அரச தரப்பு எவ்வாறான நீதியை வழங்கப்போகிறது எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் மாணவி தொடர்பான விடயத்தை பேசவிடாது எதிர்க்கட்சித் தலைவரை அமருமாறு கூறியுள்ளார்.
மாணவியின் உயிரிழப்பு
அதனைத்தொடர்ந்து, ஆளும் தரப்பின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவி்க்கையில், குறித்த மாணவியின் உயிரிழப்பை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் மாணவியின் மரணத்தை விற்று அரசியல் நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
