கொழும்பு பொலிஸ் நிலையமொன்றில் துப்பாக்கி மாயம்: விசாரணை தீவிரம்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸாரின் கைதுப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளுக்கான பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
விசேட பொலிஸ் குழு விசாரணை
இந்நிலையில், காணாமல் போன குறித்த துப்பாக்கி, அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக உரிய புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை கண்டறியும் முகமாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய நேற்று (27.09.2023) கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு விசேட பொலிஸ் குழுவொன்று விஜயம் செய்து விசேட விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan