கொட்டாஞ்சேனை சூட்டு சம்பவம்: மேலும் ஐவர் சிக்கினர்
கொழும்பு - கொட்டாஞ்சேனை, 16ஆம் ஒழுங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று முன் தினம் (10.11.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள்
18 முதல் 33 வயதுக்குட்பட்ட கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய மற்றும் கொழும்பு 13 பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri