கொட்டகலை நகரில் தீப்பரவல்! கட்டுப்படுத்த போராடும் மக்கள் (photos)
கொட்டகலை நகரிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தீ பரவியுள்ளது.
தளபாட விற்பனை நிலையங்களிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் திம்புள்ளபத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடம்பெற்ற போது, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புக்கு அமைய
ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன்
உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: திருமால்













அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
