கொட்டகலை குடிநீர்போசன பகுதிக்கு தீ வைப்பு - 25 ஏக்கருக்கும் மேல் எரிந்து நாசம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பல பகுதிகளுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதில், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் குடாஓயா மற்றும் குடாகமவில் உள்ள மானா காட்டுப்பகுதிக்கு இவ்வாறு நேற்று காலை தீ வைக்கப்பட்டுள்ளது.
தீ கட்டுப்படுத்தும் நடவடிக்கை
குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு கொட்டகலை கொமர்சல் இராணுவ முகாமின் இரானுவ வீரர்கள் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கடும் காற்று காரணமாக தீயினை கட்டுப்படுவத்துவது மிகவும் கடினமாகியுள்ளது.
தீ வைக்கப்பட்ட பகுதியிலிருந்து அமைதிப்புரம், சமாதானபுரம், நேத்ரா பிளேஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் பொது மக்கள் குடிநீரினை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியில் உள்ள நீரூற்றுக்கள் அற்றுப் போவதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புக்காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் கோரிக்கை
இதேநேரம் இந்த காட்டுப்பகுதியில் எமது நாட்டுக்கே உரித்தான பல உயிரினங்களும், அரிய வகை மருந்துவ குணம் கொண்ட மரங்களும் அழிந்து போய் இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
தீ வைப்பவர்களை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |