கொட்டகலையில் பாடசாலை மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு
கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
04.10.2024 இன்று பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதனையடுத்து அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றில் சுவரில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
