சர்வதேச அழுத்தங்களுக்குக் கோட்டாபய அரசே காரணம்: எதிரணி குற்றச்சாட்டு
சர்வதேச அழுத்தங்களுக்குக் கோட்டாபய அரசுதான் வழிவகுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண(Harshana Rajakaruna) ஊடகங்களிடம் கூறுகையில்,
மாகாண சபை முறைமை எமது நாட்டுக்கு பொருத்தமற்றது, அந்த முறைமையை ஒழிக்க வேண்டும், புதிய அரசமைப்பு ஊடாக இது நடக்கும் என அமைச்சர்களான விமல் வீரசன்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Uthaya Gammanpila), சரத் வீரசேகர(Sarath Weerasekara) ஆகியோர் தெரிவித்து வந்தனர்.
ஆனால், இந்தியாவின் இராஜாதந்திரிகள் வந்துசென்ற நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகின்றது.
ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர்கள் மௌனம் காக்கின்றனர். இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு என்ன? தேர்தல் நடைபெறுவதை நாம் எதிர்க்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலைக் கூட
எதிர்கொள்வதற்கு தயார். ஆனால், பிற நாடுகளில் அழுத்தத்தால் தேர்தல்
நடைபெறுவதையும், உள்ளக விடயங்கள் மாற்றப்படுவதையும் நாம் விரும்பவில்லை.
சர்வதேச அழுத்தங்களுக்கு இந்த அரசுதான் வழிவகுத்துள்ளது" - என்றார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri