103 போயிங் விமானங்களை கொள்முதல் செய்த கொரியன் ஏர் நிறுவனம்!
தென் கொரியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான கொரியன் ஏர் (Korean Air), தனது விமானக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் நோக்கில் 103 புதிய போயிங் (Boeing) விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2039ஆம் ஆண்டு வரையிலான நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த கொள்முதல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 36.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடி முடிவு
இந்தத் திட்டத்தின் கீழ், எரிபொருள் சிக்கனம் கொண்ட அதிநவீன 777X மற்றும் 787 டிரீம்லைனர் (Dreamliner) ரக விமானங்கள் அதிகளவில் வாங்கப்பட உள்ளன.

சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வரும் சூழலில், தனது சந்தைப் போட்டியை வலுப்படுத்தவும், பழைய விமானங்களை மாற்றவும் கொரியன் ஏர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் போயிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிம்மதியையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது.
கொரியன் ஏர்
ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாகப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் உற்பத்தித் தாமதங்களால் போயிங் நிறுவனம் பல சவால்களைச் சந்தித்து வந்தது.

தற்போது கொரியன் ஏர் வழங்கியுள்ள இந்த மிகப்பெரிய ஒப்பந்தம், ஆசியப் பிராந்தியத்தில் போயிங் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், கொரியன் ஏர் நிறுவனம் ஆசியானா ஏர்லைன்ஸ் (Asiana Airlines) நிறுவனத்துடன் இணையத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த புதிய விமானங்களின் வருகை அந்த இணைப்பிற்குப் பிறகு உருவாகும் மெகா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை மேலும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கடற்பரப்பில் ஈரான் நடத்திய தாக்குதல்கள்: இலங்கை உட்பட நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan