கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைக்கு தொடர்புடையதாக கொரிய மொழி தேர்ச்சி பரீட்சையின் பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பரீட்சை எழுதியவர்களில் சுமார் 95வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்காக 3580 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
அதில் 3422 பேர் சித்தியடைந்துள்ளனர். இது பரீட்சைக்கு தோற்றியவர்களில் 95.6 வீதமாகும். இந்த பரீட்சையின் பெறுபேறு எதிர்வரும் 27ஆம் திகதி பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்தில் பதிவிடப்படும்.
பரீட்சையில் சித்திபெற்ற விண்ணப்பதாரிகளுக்கான மருத்துவ பரிசோதனை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதார்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 6,7 மற்றும் 10ஆம் திகதிகளில் பணியகத்தின் மாகாண காரியாலயம், புலம்பெயர்ந்தோர் வள மத்திய நிலையம் மற்றும் பயிற்சி நிலையங்களில் இடம்பெறும் எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |