கொடூர விமான விபத்தின் எதிரொலி! தென் கொரிய அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
தென் கொரியாவில் உள்ள அனைத்து விமான சேவைகளுக்கும் அவசர பாதுகாப்பு ஆய்வையும் அனைத்து போயிங் 737-800 விமானங்களுக்கு தனித்தனி சோதனையையும் தொடங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.
பறவை ஒன்றுடன் மோதியதால்(Bird Strike) விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க புலனாய்வாளர்கள்
இதனையடுத்து, விபத்து நடந்து இரண்டாவது நாளான இன்று(30.12.2024) தென் கொரிய மக்கள் துக்கம் அனுஷ்டித்து வருவதோடு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், விமான சேவைகளை அவசர பாதுகாப்பு ஆய்விற்கு உட்படுத்த தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு அமெரிக்க புலனாய்வாளர்கள் இந்த ஆய்வில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரழிவு ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தென் கொரியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சோய் சாங்-மோக்(Choi Sang-mok) விமானப் பாதுகாப்பு அமைப்பை மாற்றியமைக்க இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
