10 மணி நேரம் தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கை இளைஞர்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் ( 23.05.2023 ) தென்கொரியாவிற்கு பணிக்காக செல்லவிருந்த 48 பணியாளர்களை கொரிய மனிதவள திணைக்களம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
இலங்கையை சேர்ந்த 48 தொழிலாளர்கள் தென் கொரியாவில் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மீன்பிடித் துறைகளின் கீழ் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்றுமுன் தினம் கொரியா நோக்கி செல்லவிருந்தனர்.
மனிதவளத்திணைக்களம் மறுப்பு
இருப்பினும், இவர்கள் செல்லவிருந்த விமானம் புறப்படுவதற்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 48 தொழிலாளர்களையும் அனுப்ப வேண்டாம் என கொரிய மனிதவள திணைக்களம் இலங்கைக்கு நேற்று அறிவித்துள்ளது.
குறித்த பணியாளர்களை ஏற்றிச்செல்லும் விமானம் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், ஊழியர்களின் நேர முகாமைத்துவப் பிரச்சினை காரணமாக குறித்த ஊழியர்களை ஏற்றுக்கொள்ள தென்கொரியா மனிதவளத் திணைக்களம் மறுத்துள்ளது.
இதன் காரணமாக கொரியாவுக்கு வந்த 48 இளைஞர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
