ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் இந்தியா இல்லை: இந்தியத் தூதுவர்
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப் பலரும் கூறுகின்ற போதும் நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. ஓர் உறுதியான அரசாங்கம் அமையப் பெற வேண்டும்.

அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும். ஓர் உறுதியான அரசாங்கம் அமையப்பெற வேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம்.
அதேவேளை,
பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam