“ட்விட்டர்“ தளத்தை முந்திய செல்லும் இலக்குடன் களம் இறங்கியுள்ள “கூ” !
இந்தியாவில் ட்விட்டரின் 25 மில்லியன் வலுவான பயனர் தளத்தை “கூ“ தளம் மிஞ்சும் என்று எதிர்பார்ப்பதாக அதன் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா( Mayank Bidawatka) கூறியுள்ளார்
தமது தளம் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 20 மில்லியன் பதிவிறக்கங்களை அடைந்துள்ளது.
“கூ“ தளம் ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில் 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் அனைத்தையும் “கூ“ வில் உள்ளடக்கவுள்ளதாக இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்திற்கும் அமெரிக்க மைக்ரோ பிளாக்கிங் தளத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ட்விட்டருக்கு மாற்றாக“ கூ“ வின் கவனம் ஈர்க்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், சில கணக்குகளை தடுக்குமாறு டுவிட்டரிடம் கேட்டுக் கொண்டது -
ஆரம்பத்தில் அதற்கு உடன்பட்ட ட்விட்டர் பின்னர் அதற்கு உடன்படவில்லை.
இதனையடுத்து இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அச்சுறுத்தியது.
அத்துடன் வழக்கையும் தாக்கல் செய்தது.
ட்விட்டரின் மீறல் மற்றும் டிஜிட்டல் என்ற எண்மான விதிகளுக்கு இணங்கத் தவறியதால் கோபமடைந்த மோடியின் அரசாங்கத்தின் ஆலோசனையின்பேரில், “கூ“ நிறுவப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலம் அல்லாத பயனர்களுக்கான “கூ” Koo, 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் நைஜீரியாவில் ட்விட்டரை நிறுத்தியபோது “கூ“ வின் செயற்பாடு விரிவடைந்தது.
இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் “கூ” 100 மில்லியன் பயனர்களை அடைய விரும்புகிறது.
கடந்த ஆண்டு முதல், கூ கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொலிவூட் துறையினரை ஈர்த்துள்ளது.
எனினும் ”கூ” இந்திய அரசாங்கப் பிரசாரத்தை அதிகப்படுத்துவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



