முல்லைத்தீவில் மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை உயிரிழப்பு
முல்லைத்தீவு - ஒட்டி சுட்டான், பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு
போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (2111-23) இரவு இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே உயிரிழந்துள்ளது.
யானையின் உயிரிழப்பு தொடர்பில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளார்கள்.
மேலதிக விசாரணைகள்
மின்சார வேலியினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேவேளை, சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானையால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் விவசாயிகளும் மக்களும் அங்கலாய்க்கின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
