புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்கி இறந்த கொம்பன் யானையின் சடலம் மீட்பு
புத்தளம் (Puttalam) - மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொஹம்பகஸ்வெவ பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய நிலையில் கொம்பன் யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொம்பன் யானையின் உடல் (29.06.2024) இன்று காலை தனியார் ஒருவரின் காணியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வீட்டிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று யானை வேலியில் பொருத்தியமையின் காரணமாகவே இந்த கொம்பன் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
நபர் கைது
இந்நிலையில், உயிரிழந்த கொம்பன் யானை சுமார் 8 அடி உயரமுடையது எனவும் 30 வயது மதிக்கத்தக்கது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வீட்டின் உரிமையாளரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதுடன் ஆனமடுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மேலும், யானையின் உடலுக்கு நிக்கவெரெட்டிய மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


















உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
