ஒரு நிமிடமே பேருந்தை நிறுத்தினோம்.. கொள்ளுப்பிட்டி விபத்து தொடர்பில் நடத்துனர் கூறும் விடயம்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அரச பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானபோது பேருந்தில் மொத்தம் 36 பேர் வரை இருந்தனர் என அந்த பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினரின் கேள்விக்கு பதில் வழங்கும் போது நடத்துனர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒரு நிமிடம் மாத்திரமே பேருந்தை நிறுத்தியிருந்தோம்..
மேலும், பயணச்சீட்டு வழங்கப்பட்டது 26 பேருக்கு, அதனைத் தவிர பேருந்தில் மேலதிகமாக 10 இற்கும் மேற்பட்டோர் இருந்தார்கள்.
பேருந்து தரிப்பிடத்திலேயே பேருந்தினை நிறுத்தியிருந்தோம். ஒரு நிமிடம் மாத்திரமே அந்த தரிப்பிடத்தில் நாங்கள் பேருந்தினை நிறுத்தியிருந்தோம். சிறுவர்கள் எட்டு பேர் வரை பேருந்தில் இருந்தனர் என பேருந்தின் நடத்துனர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மொத்தமாக ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் நட்ட ஈடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |