வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வர ஆலய தேரோட்டம்
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க தேரோடும் கோயில் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்பு - கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சித்திர தேரோட்டம்
ஆலயத்தின் சித்திர தேரோட்டம், ஆலய பிரதம குரு மு.கு. சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்றுள்ளது.
இந்த தேரோட்ட திருவிழாவில் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவாமி தேரேறி வெளிவீதியில் வலம் வந்துள்ளார்.

தான்தோன்றீஸ்வரர், உமாதேவியார் சமேதராய் சித்திரத் தேரிலும், பிள்ளையார் தேரிலும், அமர்ந்த வண்ணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
கல்லாக்கிய அற்புத திருத்தலம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று இரவு 7 மணியளவில் திருவேட்டை இடம்பெற்று இன்று தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
மேலும், கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய
அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan