கொக்கட்டிச்சோலை 34வது தியாகிகள் தின நினைவேந்தலும் கௌரவிப்பு நிகழ்வும்
மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை, மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப்பொருளில் சத்துருக்கொண்டான், காத்தான்குடி கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகல் படுகொலை என கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் 34வது தியாகிகள் தின நினைவேந்தலும் பெண்கள் தலைமைதாங்கும் 200 குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (23) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
பெண் தலைமை குடும்பம்
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை தலைவரும் மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எம். உதயராஜ், மட்டக்களப்பு தபால்கந்தோர் தபால் அதிபர் த.இந்திரன், மட்டு அம்பாறை செயலாளர் தோழர் சலீம், சமூக செயற்பாட்டாளர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், உட்படவர்கள் கலந்து கொண்டு (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றினர்.
இதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட கொக்கட்டிச்சேலை பிரதேசத்தைச் சேர்ந்த 200
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கி வைத்தனர்.