மட்டக்களப்பில் இடம்பெற்ற ஏர்பூட்டு விழா
கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தினை மேற்கொள்வோர் பண்டைய காலம் தொடக்கம் முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா இன்று (24) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த விழா காலை கொக்கட்டிச்சோலையில் உள்ள சிவபூமி வயல் பகுதியில் நடைபெற்றது.
ஏர்பூட்டி உழவும் நடவடிக்கைகள்
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரருக்கு தேர் உற்சவம் நிறைவடைந்ததும் மழைபெய்யும் என்றும், அக்காலப்பகுதியில் விவசாயிகள் தங்களது வயல் நிலங்களில் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலம்காலமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாக சபையினர் உட்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேட பூஜையினை தொடர்ந்து ஏர்பூட்டி உழவும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆரம்ப ஊதியப்பணமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri