யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் (Mannar) திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை யாழிலிருந்து (Jaffna) திருக்கேதீஸ்வரம் (Thiruketheeswaram)ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று (13.05.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பாரம்பரிய முறை
இந்நிலையில், கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தே திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை வழங்கப்பட்டநிலையில் யுத்த காலத்தில் அந்த முறை கைவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 40 வருடங்களுக்கு பின்னர் கடந்த வருடம் முதல் மீண்டும் யாழில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |