கதவடைப்பு தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் கடப்பாடு: கோடீஸ்வரனின் கோரிக்கை
கதவடைப்புக்கு ஆதரவு தர வேண்டிய கடப்பாடு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம்(18) இடம்பெறவுள்ள பூரண கதவடைப்புக்கு அனைத்து வர்த்தக சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி கேட்டு நிற்கின்றது.
அனைத்து கட்சிகளும் இதற்கு பூரண ஆதரவை வழங்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது. எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வுரிமை மற்றும் நில உரிமை போன்ற உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனை அடிப்படையாக வைத்தே தமிழரசுக் கட்சி பூரண கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri
