மத்திய லண்டனில் இடம்பெற்ற கோர கத்திக் குத்து தாக்குதல் - பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
மத்திய லண்டனில் இடம்பெற்ற மூன்று கத்திக் குத்து சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிஷப்ஸ்கேட்டில் கடந்த வியாழன் காலை 9.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவத்தின் போது இந்த கத்தித் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தெகநபருக்கு எதிராக கொள்ளை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் நகர காவல்துறைக்கு வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் மூன்று கத்தி குத்து தாக்குதல் பதிவாகியுள்ளதாகவும், இதில் நபர் ஒருவர் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளன.
பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே வன்முறை வெடித்ததையடுத்து, ஏராளமான இரத்தம் வெளியேறி மக்கள் தரையில் கிடப்பதைக் கண்டதாக சம்பத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விவரித்தன.
பொலிஸார் காலை 9.51 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து உதவிகளை கேட்டுள்ளனர்.
சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 0800 555 111 என்ற எண்ணில் அநாமதேயமாக Crimestoppers ஐத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.