யாழில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ், வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (21.08.2024) இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி நகரிலுள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
துன்னாலையை சேர்ந்த இருவர் நேற்று இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது, ஊழியரை திடீரென கத்தியால் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்த நெல்லியடி பொலிஸார், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri