சீனா வைத்தியசாலை ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்: இருவர் பலி
தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருப்பு நிற உடையணிந்த நபர் ஒருவர் இரண்டு கத்திகளுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
மற்றுமொரு தாக்குதல்
இதனையடுத்து, சீனாவின் உள்நாட்டு செய்தித்தாள் ஒன்றில் இரண்டு கத்திகளுடன் தாக்குதல் மேற்கொண்ட நபர் வைத்தியசாலை வரவேற்பு அறையில் நிற்பது போன்ற படம் பிரசுரமாகியுள்ளது.

அதேவேளை, காயமடைந்தவர்களில் மருத்துவர்களும் உள்ளடங்குவதாக தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டாரா என்பது குறித்த எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
மேலும், கடந்த ஒகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் இடம்பெற்ற மற்றுமொரு கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு 7 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri