கொத்தலாவல பல்கலைக்கழக யோசனை மீதான விவாதம் இந்த வாரம் நடத்தப்படாது என அறிவிப்பு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக யோசனை மீதான விவாதத்தை அரசாங்கம் இந்த வாரம் நடத்தாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனை இந்த வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
யோசனை மீது நாடாளுமன்ற மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் தெரிவிக்க அதிக நேரம் தேவை என்று கருதியதால் யோசனை விவாதிக்கப்படாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும் குறித்த யோசனை மற்றுமொரு திகதியில் விவாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த யோசனையை ஆட்சேபித்து நேற்றும் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam