இலங்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் நபரினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நியூசிலாந்து பெண், இலங்கை தொடர்பான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுபவங்களைப் மோலி பகிர்ந்துள்ளார்.
இலங்கையில் ஒரு மாதம் பயணம் செய்த போது பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், இந்த அசம்பாவிதம் மட்டுமே தன்னை பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி
ஒரு நபரின் தவறான செயற்பாட்டை வைத்து இலங்கை தொடர்பான தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள் பயமின்றி, தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டிய அவசியமின்றி எங்கும் பயணிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது ஆதரவாளர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா பொலிஸாரின் உடனடி நடவடிக்கைக்கு அவர், நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்துள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றம் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு
அதேவேளை தனது முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து வந்து ஆபாசமாக செயற்பட்ட நபரால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன்தன்னிடம் அநாகரீகமாக செயற்பட்ட நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்தமைக்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், சிலர் இந்தச் சம்பவத்திற்காக தன்னைக் குறை கூற முயன்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே ஒரு சம்பவம் ஒரு நாட்டையோ அல்லது பெண்களின் தனிப் பயணத்தையோ வரையறுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம், பெண்களின் பாதுகாப்பு, தனிப் பயணம் மற்றும் நாம் இன்னும் எதிர்கொள்ளும் யதார்த்தம் பற்றியதாகும் என அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri