தமிழர் பகுதியில் மகிந்தவால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை தொடரும் அநுர..!
2011ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டு பின்னர், இடைநிறுத்தி வைக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டத்தை தற்போதைய அரசாங்கம் மீண்டும் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வெளியான இந்த அறிவிப்பையடுத்து, இலங்கை அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த திட்டமானது, தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் இது அனைத்து இலங்கை மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும் எனவும் ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், வடக்கு மக்களுக்கு மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பிடிக்காதவர்களே இவ்வாறு விமர்சிப்பதாகவும் ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது நேருக்கு நேர் நிகழ்ச்சி,