முல்லைத்தீவு பட்டத் திருவிழாவில் தமிழீழ வரைபடம்: பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞன்
முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடம் மற்றும் கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றிய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த விசாரைணையானது நேற்று (28.01.2024)இடம்பெற்ற முல்லைத்தீவு பட்டத்திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு வருடமும் பட்டத்திருவிழா நடாத்துபவர்களால் நேற்றைய தினம் முல்லைத்தீவிலும் பட்டத்திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எனினும், இந்த பட்டத்திருவிழாவில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம் மற்றும் கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.
இதனை அவதானித்ததாக கூறிய முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |