கிண்ணியா குறிஞ்சாக்கேணி விபத்து : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நவம்பர் 23ம் திகதி இடம்பெற்ற இலுவை படகு விபத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (27) குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கிண்ணியா பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் இலுவை படகு விபத்து இடம்பெற்றபோது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan