கிண்ணியாவில் கோவிட் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நடுத்தீவு பிரதேசத்தில் கோவிட் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் நேற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக்கினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேசத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததால் இப் பிரதேசத்தில் ஒரு தனிமைப்படுத்தல் முகாம், சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கர்ப்பிணித் தாய்மார்களும் சிகிச்சை பெறக்கூடிய ஏற்பாடு உள்ளதெனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி அழைக்கப்படாமல் கோவிட் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டமை தொடர்பாக கிண்ணியா புத்திஜீவிகள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
என்ற போதும் குறித்த நிகழ்விற்கு பொறுப்பு வாய்ந்த சுகாதார வைத்திய அதிகாரி அழைக்கப்படாத நிலையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



