நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி (VIDEO)
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட படகு விபத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த அனர்த்தம் காரணமாக ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் (M.S.Thowfeek) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், பெருந்திரளான இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாயில் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளமை தெளிவாக பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி...
பலரை காவு கொண்ட படகு விபத்து! நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri